உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விளையாட்டு விடுதி தேர்வு போட்டி

விளையாட்டு விடுதி தேர்வு போட்டி

கள்ளக்குறிச்சி: விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 28 இடங்களில் பயிற்சி, தங்கும் வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நேற்று 7,8,9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது. இதில் கிரிக்கெட், கூடைப்பந்து, கபடி, ஹாக்கி மற்றும் தடகள போட்டிக்கான தேர்வுகள் நடைபெற்றன. மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உடற்கல்வி இயக்குனர்கள் ஹரிஹரன், வீரமுத்து, பாலுசாமி, உற்கல்வி ஆசிரியர்கள் தனசெல்வம், சாமிதுரை ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து மாணவியருக்கான தேர்வு போட்டிகள் இன்று நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை