நாககுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சின்னசேலம்; சின்னசேலம் அடுத்த நாககுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜோதிபாசு, தாசில்தார் பாலகுரு முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கோகிலா பெரியான், வரவேற்றார். பி.டி.ஓ., க்கள் சுமதி, சவுரிராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, ரேகா உட்பட ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டது.