உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 17ம் தேதி முதல் திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

17ம் தேதி முதல் திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:மக்களின் குறைகள் நேரடியாக கேட்டறியப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி இத்திட்டத்தினை வரும் 15ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். தொடர்ந்து திருக்கோவிலுார் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் 11 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் 17ம் தேதி 1, 2, 3 வார்டுகளுக்கு சுப்ரமணிய மஹால் திருமண மண்டபத்திலும், 23ம் தேதி 5, 6, 14 வார்டுகளுக்கு செவலை ரோட்டில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்திலும் நடக்கிறது.ஆகஸ்ட் 6ம் தேதி 4, 15, 16 வார்டுகளுக்கு ராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும், ஆகஸ்ட் 12ம் தேதி 7, 8 வார்டுகளுக்கு காரி பாரி திருமண மண்டபத்திலும், ஆகஸ்ட் 20ம் தேதி 9, 10, 11 வார்டுகளுக்கு ராதா திருமண மண்டபத்திலும், 28ம் தேதி 12 ,13 வார்டுளுக்கு பழைய நகராட்சி அலுவலக கட்டடத்திலும் நடக்கிறது.செப்டம்பர் 3ம் தேதி 17, 18 வார்டுகளுக்கு மார்க்கெட் தெரு, ஜெயின் மகாலிலும், செப்டம்பர் 9ம் தேதி 19, 20, 21 வார்டுகளுக்கு சந்தைப்பேட்டை, மீர் மகாலிலும், 17ம் தேதி 22, 23 வார்டுகளுக்கு ஆண்டவர் மஹாலிலும் நடக்கிறது. 24ம் தேதி 24, 25 வார்டுகளுக்கு ஜெய விஜய மஹால் திருமண மண்டபத்திலும், 30ம் தேதி 26, 27 வார்டுகளுக்கு எம்.ஜெ., மஹலிலும் முகாம் நடைபெற உள்ளது. இதற்காக நகராட்சியில் உள்ள 8,346 குடியிருப்புகளுக்கு, தன்னார்வலர்கள் மூலம் 3413 விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ