உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி பரிசளிப்பு

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி பரிசளிப்பு

கள்ளக்குறிச்சி : மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ' மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு இறகுப்பந்து சங்க பொது செயலாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர்கள் சுரேந்திரன், ராஜ்மோகன், அருண், மாநில பொருளாளர் மோகன்குமார், துணைத்தலைவர் மாறன், நிதிக்குழு சேர்மன் வினோத்குமார், தொழிலதிபர் ராமநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ், சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ராஜவேந்தன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப்பந்து சங்க செயலாளர் பிரதீப் வரவேற்றார்.தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் 11 வயதுக்குட்பட்ட ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த 2ம் தேதி துவங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்ற 38 பேருக்கு பரிசுத்தொகை, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப்பந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சங்க தலைவர் ரவி, பொருளாளர் பரத், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சதாசிவம், துணை செயலாளர் சண்முகம், தொழிலதிபர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை