மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு யோகா பயிற்சி
08-Jul-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மூங்கில்துறைப்பட்டு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா, ஆசான் சூரியமூர்த்தி, தன்னார்வலர் பாலகுமாரன், துணைச் சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை வேலன் முன்னிலை வகித்தனர். வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் அய்யப்பா, பொருளாளர் சக்திவேல், ஜான் வின்சென்ட் ராஜ், விக்கி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
08-Jul-2025