மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டி நடந்தது. மூங்கில்துறைப்பட்டு தனியார் மண்டபத்தில் வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு சிலம்பம் மற்றும் கராத்தே போட்டி நடைபெற்றன. போட்டியினை மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் மயிலவன், வணிகர் சங்க செயலாளர் பாலகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரம் விளையாட்டு அறக்கட்டளை மேம்பாட்டு செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ஐயப்பன், ஜான் வின்சென்ட் ராஜ், சக்திவேல், விக்கி, நாகராஜ், சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.