உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிலை கண்காணிப்பு குழு தீவிர வாகன சோதனை

நிலை கண்காணிப்பு குழு தீவிர வாகன சோதனை

ரிஷிவந்தியம்: லோக்சபா தேர்தலையொட்டி பகண்டைகூட்ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணித்து, தடுக்கும் பொருட்டு வாகனங்களை கண்காணிக்க ஒரு சட்டசபை தொகுதிக்கு, 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர், பகண்டைகூட்ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களை நிறுத்தி பணம் மற்றும் பாத்திரங்கள், நகை உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் பைபாஸ் சாலையில், தோட்டக்கலை அலுவலர் ஆனந்தபாபு தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி உள்ளிட்ட நிலை கண்காணிப்பு குழுவினர் அவ்வழியாக சென்ற கார்கள் உட்பட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், வாகன சோதனையின் போது வீடியோ பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

மூங்கில்துறைப்பட்டு

கடுவனுார் பகுதியில், நீர்வளத்துறை துணை பொறியாளர் பிரசாந்த் தலைமையில் திருவண்ணாமலை இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சென்ற வாகனங்களை சோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ