மேலும் செய்திகள்
சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்தது
28-Oct-2025
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணை அதன் முழு கொள்ளவு 119 அடி (7,321 மில்லியன் கன அடி) என்றாலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 113 அடி, அதாவது 6,000 மில்லியன் கன அடி நீர் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் தற்பொழுது குறைந்திருப்பதுடன் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் அணைக்கான நீர்வரத்து வேகமாக குறைந்து விட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,090 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் இருப்பை அதிகரிக்கும் நோக்குடன் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் 113.15 அடி, (6,056 மில்லியன் கன அடியாக) நீர் இருப்பு சற்று உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் அணையின் நீர் இருப்பை அதிகரிக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
28-Oct-2025