உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேலை நிறுத்தம் போராட்டம்

வேலை நிறுத்தம் போராட்டம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பணி அடையாள அட்டை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 60 சதவீதம் கூலி உயர்வை‌ வழங்க வேண்டும். சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பும் பணி பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி