உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், காரணுார் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகள் மோனிஷா, 17; அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி. கடந்த 1ம் தேதி மோனிஷா வீட்டு வேலை செய்யவில்லை என அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷா நேற்று காலை இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை