உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டவுன் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்; போதிய பஸ்கள் இல்லாததால் அவலம்

டவுன் பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்; போதிய பஸ்கள் இல்லாததால் அவலம்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் போதிய அளவில் டவுன் பஸ்கள் இயக்காததால், பள்ளி கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியும், மேற்கூரை மீது அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். உளுந்துார்பேட்டையில் இருந்து பாண்டூர், கொட்டாங்குச்சி, கிளியூர் வழியாக அத்திப்பாக்கம், நத்தாமூர், வடமாம்பாக்கம், திருக்கோவிலுாருக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப் படுகிறது. இதில் அத்திப்பாக்கத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் தடம் எண் 16 எச் டவுன் பஸ் கிளியூர், குன்னத்துார், பிள்ளையார் குப்பம், கொரட்டங்குறிச்சி, பாண்டூர் வழியாக உளுந்துார்பேட்டை செல்கிறது. அதேபோல் நத்தாமூரிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்படும் தடம் எண் 1 டவுன்பஸ் கிளியூர், குன்னத்துார் வழியாகவும், வடமாம்பாக்கத்தில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்படும் தடம் எண் 13 டவுன் பஸ் நத்தாமூர் கீளியூர் வழியாக உளுந்துார்பேட்டை செல்கிறது. மாலை 4:30 மணிக்கு உளுந்துார்பட்டையில் இருந்து தடம் எண் 279, நத்தாமூர் வழியாக திருக்கோவிலுார் செல்கிறது. மாலை 5:10 மணிக்குபுறப்படும் தடம் எண் 1 அரசு டவுன் பஸ், கிளியூர் வழியாக தாமல் செல்கிறது. மாலை 5:30 மணிக்கு தடம் எண் 16 எச் பஸ் அத்திப்பாக்கம் செல்கிறது. இரவு 7 மணி, 7.30, இரவு 9:30 மற்றும் இரவு 10:00 மணிக்கு அடுத்தடுத்து டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பள்ளி, கல்லுாரி, வேலைக்குச் செல்லும் காலை நேரத்தில் இப்பகுதியில் இருந்து 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் டவுன் பஸ்களில் தினசரி கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்சில் இடம் கிடைக்காததாலும், வேறு பஸ் இல்லாத காரணத்தால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் 2 டவுன் பஸ்களிலும் படிகட்டுகளில் தொங்கியபடியும், பஸ் மேற்கூரை மீது அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கிராமப்புற வழித்தடத்தில் காலை நேரத்திலும் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை