உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாட தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வழிகாட்டுதலுடன்படி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அரசு பள்ளி 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எதிர்வரும் 10ம் வகுப்பு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சியை உயர்த்திட ஆசிரியர்கள் கடுமையாக பணியாற்றிட வேண்டும் என சி.இ.ஓ., கார்த்திகா அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை