கணித பாட தேர்ச்சியை உயர்த்த ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் செ ந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைவாக எடுத்த 96 பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். அவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கட்டாயம் உயர்த்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.