உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்டலை அருகே சாலையில் திடீர் பள்ளம்

தண்டலை அருகே சாலையில் திடீர் பள்ளம்

கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து தண்டலை வழியாக சூளாங்குறிச்சி செல்லும் சாலையில், தண்டலை பெரிய ஏரிக்கரை அருகே, வளைவு பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரிய ஏரியில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மதகின் மேல்பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால், பள்ளங்கள் உருவாகி உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருப்பதிற்காக சிகப்பு நிற துணி கட்டி வைத்துள்ளனர். சாலையின் ஒரு பக்கம் மண் கொட்டி தற்காலிமாக சமன்படுத்தி வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஒரிரு நாட்களில் அப்பகுதி வழியாக செல்லும் மதகு வாய்க்காலும் உடைய வாய்ப்புள்ளது. எனவே, மதகு குழாய் உடைப்பை சரிசெய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை