உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ. 10.5 கோடி ஊக்க தொகை வழங்கல் கரும்பு விவசாயிகள் கொண்டாட்டம்

ரூ. 10.5 கோடி ஊக்க தொகை வழங்கல் கரும்பு விவசாயிகள் கொண்டாட்டம்

மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஊக்கத் தொகையாக ரூ. 10.5 கோடி விவசாயிகளுக்கு வழங்கியதையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை - 1 செயல்பட்டு வருகிறது இந்த ஆலையில் 2024-25 ஆண்டில் முதன்மை அருமை பருவத்தில் 3 லட்சத்து 905 டென் அரவை செய்யப்பட்டது. இந்த அரவைக்கு கரும்பு வழங்கிய 3790 அங்கத்தினருக்கு சிறப்பு ஊக்க தொகையாக ஒரு டன்னுக்கு ரூபாய் 349 வீதம், 10 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 190 ரூபாய், கடந்த 29ம் தேதி விவசாயிகள் வங்கி கணக்கிற்கு நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டது. இந்த சிறப்பு ஊக்கத்தொகை பெற்ற விவசாயிகள், அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டுறவு ஆலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சங்கராபுரம் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக் குமார்,கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் விஜயராஜ் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை