உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு

கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 - 26ம் ஆண்டு அரவை பருவத்தில் 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 - 25ம் ஆண்டு சிறப்பு அரவை பருவம் மற்றும் 2025-26ம் ஆண்டு முதன்மை அரவை பருவ அரவை பணியை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்து கூறியதாவது; நடப்பு அரவை பருவத்திற்கு 9,300 ஏக்கர் அளவில் விவசாயிகள் கரும்பு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4250 கரும்பு அங்கத்தினர்கள் பயன்பெறுவர். கடந்த 2024-25ம் ஆண்டு முதன்மை அரவை பருவத்தில் 3.9 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது என கூறினார். துவக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மீனாட்சி, தலைமை கரும்பு அலுவலர் ராஜேஷ் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி