உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோமுகி, மணிமுக்தா அணையில் உபரி நீர் முழுதும் வெளியேற்றம்

கோமுகி, மணிமுக்தா அணையில் உபரி நீர் முழுதும் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி; கோமுகி, மணிமுக்தா அணையில் இருந்து உபரி நீர் முழுதும் ஆறு வழியாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் கோமுகி, மணிமுக்தா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனையடுத்து இரு அணைகளும் முழு கொள்ளளவுக்கு உயர்ந்ததையடுத்து ஆறு வழியாக உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று கோமுகி அணையில் வரத்து நீரான 5000 கன அடி நீரும், மணிமுக்தா அணையில் 2,500 கன நீரும் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை