உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட குத்துச் சண்டை போட்டி சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் தங்கம்

மாவட்ட குத்துச் சண்டை போட்டி சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் தங்கம்

சங்கராபுரம்: மாவட்ட அளவில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தினவிழா விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான குத்துச் சண்டை போட்டி சங்கராபுரம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி யில் நடந்தது. இதில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள், தேவபாண்டலம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர் கருணா 63 கிலோ எடை பிரிவிலும், சங்கராபுரம் நியூபவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மணவர் சாய் சரன் 32 கிலோ எடை பிரிவிலும், கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிகில் பிரணவ் 30 கிலோ எடை பிரிவிலும் பங்கேற்றனர்.இதில், மூவரும் தங்கம் வென்றனர். மேலும் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாநில குத்துச் சண்டை போட்டிக்கு மூவரும் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வ ராஜ், குத்துச் சண்டை போட்டி நடுவர் இஸ்மாயில், பள்ளி மாணவர்களின் உடற்கல்வி ஆசிரியர்கள் பூபதி, ஜெயபிரகாஷ், தமிழ்மணி மற்றும் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் சூரியமுர்த்தி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை