உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருக்கோவிலுார் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் கோவில் நகர லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.திருக்கோவிலுார் கோவில் நகர லயன்ஸ் சங்கம், டவுன் லைன்ஸ் சங்கம், லட்சுமி வித்யாலயா லியோ சங்கம், வள்ளியம்மை மகளிர் கல்லுாரி லியோ சங்கம் இணைந்து, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, லட்சுமி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது.திருக்கோவிலுார் கோவில் நகர லயன்ஸ் சங்க தலைவர் ஜனசக்தி, டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வில்வபதி, மூத்த சங்க நிர்வாகி மதிவாணன் தலைமை தாங்கினார்.திருக்கோவிலுார் கோவில் நகர லயன்ஸ் சங்கத்தின் தலைவராக சூரியகலா, செயலாளர் மஞ்சுளா, பொருளாளராக லீலாவும், டவுன் லயன்ஸ் சங்க தலைவராக பாலமுருகன், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் செந்தில்குமார், லட்சுமி வித்யாலயா லியோ சங்க தலைவராக சரஸ்வதி, செயலாளர் அம்மு, பொருளாளர் செல்லம்மாள், வள்ளியம்மை மகளிர் கல்லூரி லியோ சங்க தலைவர் இந்து, செயலாளர் கலையரசி, பொருளாளர் சோபியா ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன், பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ்நீலகண்டன், சேவை திட்டங்களை துவக்கி வைத்தார்.புதிய உறுப்பினர்களை மாவட்ட ஆளுநர் ராஜா சுப்ரமணியம் சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை