மேலும் செய்திகள்
பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்
22-Aug-2025
சங்கராபுரம்; அ.பாண்டலத்தில் தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் கிராமத்தில் தி.மு.க., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், அட்மா குழும தலைவர் ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது; வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் தி.மு.க., வெற்றி பெற உறுப்பினர்கள் அயராது பாடுபட வேண்டும். தி.மு.க., உறுப்பினர் படிவத்தை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமுரூதீன், வழக்கறிஞர் பால அண்ணாமலை, மாவட்ட நிர்வாகி முனுசாமி, தொழில்நுட்ப அணி கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Aug-2025