உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  2 மாதத்தில் தார் சாலை டர்ர்... பேட்ச் ஒர்க் செய்யும் அவலம்

 2 மாதத்தில் தார் சாலை டர்ர்... பேட்ச் ஒர்க் செய்யும் அவலம்

மூங்கில்துறைப்பட்டு: டிச. 16-: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுார் கூட்ரோட்டில் இருந்து அருளம்பாடி வரை போடப்பட்ட தார் சாலை படுமோசமாகி பேட்ச் ஒர்க் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலுார் கூட்ரோட்டிலிருந்து அருளம்பாடி வரை சுமார் 3 கி.மீ., துாரம் தார்சலை 1 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்த சாலை உலகலப்பாடி அருளம்பாடி மங்கலம் ஆகிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது. கடந்த வாரம் பெய்த மழைக்கு சாலை தாக்கு பிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. அதனைத் தொடர்ந்து, சாலை பெயர்ந்த இடங்களில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டு வருகிறது. சாலை போடப்பட்ட 2 மாதத்திலேயே கந்தலாகி பேட்ச் ஒர்க் செய்யப்படுவதால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீதும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை