உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொதுக்குழு கூட்டம் நடந்தது.வட்டார தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாலு வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் தண்டபாணி கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜாராம் போராட்டம் குறித்து பேசினார். இதில், சென்னையில் நடக்க உள்ள ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதில் உஷாராணி, தமிழரசி, ராதா, மார்டின், குபேந்திரன், அய்யாசாமி, ரஞ்சிதம் ஆகியோர் பேசினர். வட்ட பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை