உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை அடுத்த ஏ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன்கள் சந்திரன்;22 ; அபிலாஷ்,20. இருவரும் கோயம்புத்தூரில் ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர்.தனது உறவினர் திருமணத்திற்காக கோயம்புத்தூரில் இருந்து பஜாஜ் பல்சர் வாகனத்தில் இருவரும் புறப்பட்டு சென்றனர்.நேற்று காலை 9:00 மணிக்கு தியாகதுருகம் புறவழி சாலையில் சென்றபோது இவர்களுக்கு பின்னால் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அபிலாஷ் காயமின்றி தப்பினார்.இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ