உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் தைப்பூச விழா

சங்கராபுரத்தில் தைப்பூச விழா

சங்கராபுரம், : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில், தை பூச விழா நடந்தது. மன்ற தலைவர் பால்ராஜ் தலைமையில் அகவல் படிக்கப்பட்டது. பின், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சன்மார்க்க ஊர்வலம் நடந்தது. சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் முத்துக்கருப்பன், செயலாளர் ராதா கிருஷ்ணன், மூர்த்தி, இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவி கலாவதி, தற்போதைய தலைவி சுபாஷினி ரமேஷ், செயலாளர் மஞ்சுளா, ஆமினா அறக்கட்டளை தலைவர் இதயத்துல்லா, ஜூவல்லரி மார்ட் ராஜசேகர், டாக்டர் நாச்சியப்பன், குசேலன், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ரோட்டரி தலைவர் அசோக்குமார் உட் பட பலர் பங்கேற்றனர்.திருக்கோவிலுார்: கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சுப்ரமணியருக்கு நேற்று காலை 6:00 மணிக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, பஞ்சாவரண பூஜை, சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ