மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
31-Mar-2025
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு இளந்தேவன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் பவுல்ராஜ் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமால் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக விவசாய பிரிவு துணைச்செயலாளர் சன்னியாசி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
31-Mar-2025