உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாதனை மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோள்; மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் பெருமிதம்

சாதனை மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோள்; மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் பெருமிதம்

தியாகதுருகம் : கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி சாதனையாளர்களாக மாற்றுவதே மவுண்ட் பார்க் பள்ளியின் குறிக்கோள் என தாளாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தியாகதுருகம், மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டு மாவட்ட அளவில் மாணவர்கள் சாதித்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், மாணவர் சக்தி 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்தார். 580 மதிப்பெண்ணுக்கு மேல் 9 பேர்; 570க்கு மேல் 22 பேர்; 550க்கு மேல் 51 பேர்; 500க்கு மேல் 191 பேர்; மதிப்பெண் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில், 19 சென்டம் எடுத்து சாதித்துள்ளனர். அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் எடுத்து மாணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட அளவில் சாதனை புரிந்தார். 490 மதிப்பெண்ணுக்கு மேல் 7 பேர்; 480 க்கு மேல் 18 பேர்; 470க்கு மேல் 39 பேர்; 460 மேல் 66 பேர்; 450க்கு மேல் 93 பேர்; மதிப்பெண் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில் 20 பேர் சென்டம் எடுத்து சாதித்துள்ளனர். ஒரு மாணவர், 10ம் வகுப்பில் பெறும் மதிப்பெண் சதவீதத்தை விட பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகம் பெற, சிறப்பு பயிற்சி அளித்து, கல்வித்தரத்தை உயர்த்துவது எங்கள் சிறப்பு. அதேபோல மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாடமியில் ஆண்டுதோறும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏராளமான மாணவர்கள் எங்கள் பள்ளியில் படித்து சாதனை மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்.10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 25 முதல் 100 சதவீதம் வரை கட்டண சலுகையுடன் பிளஸ் 1 சேர்க்கை நடந்து வருகிறது. சாதிக்க விரும்பும் மாணவர்கள் நேரிலோ அல்லது 75388 86105 என்று மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மணிமாறன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை