வயலில் இறங்கிய பஸ் பயணிகள் தப்பினர்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு டவுன் பஸ் சாலையோர வயல்வெளியில் இறங்கி விபத்துக்குள்ளானது. பயணிகள் பாதிப்பின்றி தப்பினர்.திருக்கோவிலுார் அடுத்த லாலாபேட்டையில் இருந்து நேற்று காலை 8:10 மணியளவில் திருக்கோவிலுார் நோக்கி அரசு டவுன் பஸ் (தடம் எண்18) சென்றது. நெடுமுடை யான் அருகே சென்ற போது, திடீரென பசுமாடு குறுக்கிட்டதால், டிரைவர் மாட்டின் மீது மோதால் இருக்க சாலையோரம் திருப்பினார். இதில் கட்டுப் பாட்டை இழந்து பஸ் வயலில் இறங்கியது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.