உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழைய இரும்பு கடையில் திருட்டு: போலீஸ் விசாரணை

பழைய இரும்பு கடையில் திருட்டு: போலீஸ் விசாரணை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பழைய இரும்பு கடையில் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கத்தில், வடக்குநெமிலியைச் சேர்ந்தவர் நாவப்பன், 40; பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி காலை கடையை திறந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ