உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்குவரத்திற்கு முக்கியமான திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலை... அகலப்படுத்தப்படுமா

போக்குவரத்திற்கு முக்கியமான திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலை... அகலப்படுத்தப்படுமா

திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலை மிகவும் பழமையானது. சங்கராபுரம், மூங்கில்துறைபட்டு, மணலூர்பேட்டை, ரிஷிவந்தியம், பகண்டை கூட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விழுப்புரம் செல்வது, மேலும் சென்னை, புதுச்சேரிக்கு செல்வதற்கான முக்கியமான வழித்தடமாக உள்ளது. இது மட்டுமல்லாது வழிநெடுகிலும் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர் - விழுப்புரம் மார்க்கத்தில் 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் வசதி உள்ளது.கார் லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் அதிகம். மிக முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை நெடுஞ்சாலைத்துறை என்ன காரணத்தினாலோ தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதற்கு பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட பல சாலைகள் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இச்சாலையில் சீரமைக்கிறோம் என்ற பெயரில் ஆங்காங்கே ஒன்று இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்தியுள்ளனர். அதுவும் தரமற்ற வகையில், 50க் கும் மேற்பட்ட வேகத்தடைகள், 30க் கும் மேற்பட்ட வளைவுகள், இப்படி வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் புதிதாக ஆங்காங்கே சமீபத்தில் போடப்பட்டிருக்கும் கல்வெர்ட்டு பாலங்களில் ஏற்பட்டிருக்கும் மேடு பள்ளங்களை கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. பஸ்சில் பயணித்தால் விழுப்புரம் சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிவிடும். குறிப்பாக அரகண்டநல்லூரில் சாலையோரம் அமைந்துள்ள புளிய மரங்களை அகற்ற இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் எந்த வித முயற்சியை எடுக்காமல் உள்ளனர்.சமீபத்தில் மணம்பூண்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம் ் என்ற பெயரில் பாதிப்பு இல்லாத வீடுகளை இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத்துறை, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. முகையூர், மாம்பழப்பட்டு என பல பகுதிகள் மிகக் குறுகிய சாலையாக இருப்பதால், விபத்துக்கள் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.சமீபத்தில் அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரவுண்டானா என்ற பெயரில் தரமற்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது விபத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. இதன் தரம் குறித்து நெடுஞ்சாலை துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. திருக்கோவிலூரில் புறப்பட்டால் அரகண்டநல்லூரை கடப்பதற்கு அரை மணி நேரம் ஆகிவிடும். நெடுஞ்சாலைத்துறை, இனியாவது முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி