உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் திருக்குறள் திருப்பணிகள் சார்ந்த பயிற்சி வகுப்பு நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு, கல்லுாரி பொறுப்பு முதல்வர் குப்புசாமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சியாளர்கள் வளர்மதி, முத்தமிழ் முத்தன், சாந்தகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பொதுமக்களிடம் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 'திருக்குறள் திருப்பணிகள்' என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கென உருவாக்கப்பட்ட குழுவினர் திருக்குறளின் நுணுக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் வாழ்வியல் நெறிகள் குறித்து நுண்பயிற்சியாளர்களுக்கு கற்பிப்பர். தொடர்ந்து, திருக்குறள் சார்ந்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி துறைத்தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி