திருக்கோவிலுார் -- ஆசனுார் நான்கு வழிச் சாலை பணி ஆய்வு
திருக்கோவிலுார்,;திருக்கோவிலுார் - ஆசனுார் நான்கு வழிச்சாலை பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். திருக்கோவிலுாரில் இருந்து ஆசனுார் வரை 17 கி.மீ., துாரத்திற்கு, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி 100 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. பணியின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து, திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் நாகராஜன், திருக்கோவிலுார் உதவி கோட்ட பொறியாளர் ஜெயலட்சுமி, இளநிலை பொறியாளர் ஏழுமலை உடனிருந்தனர். ஒப்பந்ததாரரிடம், பணியை தரமாகவும், விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.