உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் பெண்கள் பள்ளி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

திருக்கோவிலுார் பெண்கள் பள்ளி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்களின் ஏழு நாள் சிறப்பு முகாம் மணம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. முகாம் துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் லதா முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் சங்கீதா மாணவிகளை வழி நடத்திச்சென்றார். பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்துவது, வரதராஜ பெருமாள் கோவில் உழவார பணி, மரக்கன்றுகள் நடுவது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் என முகாமில் பங்கேற்ற மாணவிகள் பல்வேறு நல திட்ட பணிகளை மேற்கொண்டனர். முகாமில் என்.எஸ்.எஸ்., மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி