மேலும் செய்திகள்
தேவனுாரில் பொதுமக்கள் மறியல்
06-Dec-2024
திருக்கோவிலுார் ; அரகண்டநல்லூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை ஒதுக்கி விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமித் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் குமரகுருபரன், ரவி மற்றும் போலீசார் நேற்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இதில் மணம்பூண்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குமாரி, 55; வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நடந்த சோதனையில் ஏழு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல் தணிக்கலாம்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ஜெயம்மாள், 56; வீட்டில் இருந்து எட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் டி.தேவனுாரைச் சேர்ந்த குப்புசாமி மகன் விஜயகுமார், 49; வீட்டில் நடந்த சோதனையில் ௬ மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரகண்ட நல்லுார் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.
06-Dec-2024