பைக் மீது கார் மோதி விபத்து குருப் 4 தேர்வுக்கு சென்ற மூவர் காயம்
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குருப் 4 தேர்வுக்கு சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் சிவபெருமாள், 30; இவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகள் சிவரஞ்சனி, 25; பவன் மகள் திவ்யா, 24; ஆகியோரை நேற்று நடந்த குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக, தனது பல்சர் பைக்கில் மேட்டத்துாரில் இருந்து எலவனாசூர்கோட்டை நோக்கி அழைத்து சென்றார்.நேற்று காலை 8:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் அருகே பைக் சென்ற போது, விழுப்புரத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி வந்த மகேந்திரா ஸ்கார்பியோ கார், முன்னே சென்ற சிவபெருமாள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் பைக்கில் சென்ற சிவபெருமாள், சிவரஞ்சனி, திவ்யா ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் மூவரையும் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.