உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்

திருக்கோவிலுார் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், சந்தப்பேட்டை ஜெயவிஜய மகால் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமரகுரு, மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாவட்ட பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட பாசறை செயலாளர் வினோத், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாக்யராஜ், ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், பொருளாளர் வடமலை.ஒன்றிய துணைச் செயலாளர்கள் இந்திரா, காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் ஞானவேல், வெங்கடேச, பிரசாத், மஞ்சுளா, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை