டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டிட்டோ ஜாக் சார்பில் தஞ்சாவூர் ஆசிரியை கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தஞ்சாவூர் ஆசிரியை கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், ஷேக் ஜாகீர் உசேன், சூரியகுமார், மனோகரன், எழிலரசன் முன்னிலை வகித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் ஆசிரியை கொலையை வன்மையாக கண்டிக்கிறோம். ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் கூட்டணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ரஹீம், அண்ணாமலை, லாரன்ஸ், ஏழுமலை, அசோ கன், ஏழுமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.