உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் புத்திராம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் ஏழுமலை, 41; என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் ஏழுமலையை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மூக்கனுார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுந்தர், 36; என்பவருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. சுந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !