உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் தக்காளி, பீன்ஸ் சாகுபடி

கல்வராயன்மலையில் தக்காளி, பீன்ஸ் சாகுபடி

சங்கராபுரம் : கல்வராயன் மலையில் தக்காளி, பீன்ஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கல்வராயன்மலை பகுதியில் உள்ள சேராப்பட்டு, பாச்சேரி, தொரடிபட்டு உள்ளிட்ட பல மலை கிராமங்களில் தக்காளி மற்றும் பீன்ஸ் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் தரக்கூடிய பீன்ஸ் தொடர்ந்து பயிர் செய்யப்படுகிறது.தக்காளி, பீன்ஸ் என்பது 3 மாத கால பயிர் என்பதால், வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பராமரிப்பு செலவு மிக குறைவு. இதனால் கல்வராயன்மலை பகுதி கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் பீன்ஸ், தக்காளி சாகுபடி பணிகளில் ஆர்வம் காட்டி வருவதாக விவசாயி ஒருவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை