உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மார்க்கெட் கமிட்டியில் ரூ.1.16 கோடிக்கு வர்த்தகம்

மார்க்கெட் கமிட்டியில் ரூ.1.16 கோடிக்கு வர்த்தகம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஒரே நாளில் ரூ. 1.16 கோடி வர்த்தகமானது. அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் எள், நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளது. அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று ஒரு மூட்டை எள்ளின் விலை, சராசரியாக ரூ.10,989, க்கு வர்த்தகமானது. அதேபோல, 4,200 மூட்டை நெல் ஏலத்திற்கு வந்திருந்தது. இதன் காரணமாக மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களின் வரத்து 379 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்தது. இதன் மூலம் நேற்று ரூ. 1.16 கோடிக்கு வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி