உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் நகரில் போக்குவரத்து போலீஸ் தேவை

சங்கராபுரம் நகரில் போக்குவரத்து போலீஸ் தேவை

சங்கராபுரம்: சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்க மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சங்கராபுரம் நகரில் சாலையின் இருபுறம் உள்ள கடைகளின் முன்பு வாகன ஓட்டிகள் தங்களது பைக்கை நிறுத்தி செல்வதால் எதிரே செல்லும் வாகனத்திற்கு வழிவிட முடியாமல் தினசாரி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகி 5 ஆண்டுகள் ஆகியும் சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. போக்குவதரத்து சரிசெய்ய போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்க மாவட்ட எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ