மேலும் செய்திகள்
வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு பயிற்சி
13-Sep-2024
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தில் நிலையான கரும்பு சாகுபடி குறித்து பயிற்சி நடந்தது.முகாமிற்கு, வேளாண் மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். பண்ணாரி அம்மன் கரும்பு ஆலை மேலாளர் கோவிந்தன், துணை மேலாளர் செல்வம் ஆகியோர் கரும்பு சாகுபடியில் அதிக விளைச்சல். புதிய ரகங்கள் கரும்பில் ஏற்படும் வேர் கரையானைக் கட்டுபடுத்துதல். நோய் மற்றும் பூச்சி, கலை கட்டுபாடு, உர மேலாண்மை, நீர் நிர்வாகம் ஒரு பரு கருணை, சொட்டு நீர் பாசனம் குறித்து கரும்பு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.மேலும், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ், ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை ஆகியோர் அரசு மானிய திட்டங்கள், ஆத்மா திட்டம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.பயிற்சியை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகலாதன், செல்லன், உதவி கரும்பு மேலாளர் பரணிதரன் ஆகியோர் அளித்தனர். கரும்பு விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
13-Sep-2024