உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி 

ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி 

கள்ளக்குறிச்சி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை பொறியியல் படித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமை திறன்கள், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நிபுணர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.கடந்த 2022, 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று, 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.பயிற்சி பெற www.tahdco.comஇணையதளத்தில் பதிவு செய்து கொள்ள லாம். கோயம்புத்துார், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன், 18 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். மேலும், விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ