உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. வட்டாரவள மைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் முன்னிலை வைத்தார். சிறப்பு பார்வையாளர் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட இணை இயக்குநர் பொன்குமார் பயிற்சியை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உடனிருந்தனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயகுமார், சரளா, ரோசாலிபாய் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர். சிறப்பு பயிற்றுநர்கள் ஜெயசீலன், சுமையா, சுமதி, கலா, இல்லம் தேடிக் கல்வி முதன்மை தன்னார்வலர் ரம்ஜானி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி