உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வியாபாரிகளுக்கு பயிற்சி

உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வியாபாரிகளுக்கு பயிற்சி

சின்னசேலம்: உணவு பாதுகாப்பு மற்று ம் மருந்து நிர்வாகத் துறை சார்பில் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த பயிற்சி சின்னசேலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சின்னசேலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தாரணி தலைமை தாங்கி பேசினார். விரிவுரையாளர் தினேஷ், நகர மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பாண்டி யன், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் வெங்கடேசன் பயிற்சியை துவக்கி வைத்தனர். உணவு பாதுகாப்பு நடவடிக்கை, தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு சட்ட திருத்தங்கள், உணவு பொருள் பாக்கெட்டுகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது. பால் பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து வகைகளை பயன்படுத்தும் வழி முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உரிமம் இல்லாத கடைகள், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் சங்க தலைவர் அசோகன், நகர வியாபாரிகள் சத்யா, சீனுவாசன் , வியாபாரி யாதவகுமார் மற்றும் சின்னசேலம், நயினார்பாளையம், கச்சிராயபாளையம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை