உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 22 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க மாற்று ஏற்பாடு

22 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க மாற்று ஏற்பாடு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி துணை மின்நிலையத்தில் மேம்பாட்டு பணி காரணமாக, 22 கிராமங்களுக்கு வேறு மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட உள்ளது.மின்வாரிய செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியை, 25 எம்.வி.ஏ.,உயர் திறன் கொண்டதாக மேம்படுத்தும் பணி நாளை மறுதினம் 22ம் தேதி துவங்கி வரும், 26 ம் தேதி வரை நடக்கிறது. இதனால் சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்துார், குதிரைச்சந்தல், குடிகாடு, காரனுார், அக்கராயபாளையம், கடத்துார், கச்சிராயபாளையம், ஏர்வாய்பட்டினம், தோப்பூர், வெங்கட்டாம்பேட்டை, அம்மாபேட்டை, சோமண்டார்குடி, நத்தமேடு, க.அலம்பளம், பொன்பரப்பட்டு, புதுமோகூர், மோ.வன்னஞ்சூர், ரோடுமாமாந்துார், ஹாஜியாநகர், சிறுவங்கூர் ஆகிய, 22 கிராமங்களுக்கு மாற்று ஏற்பாட்டில், வேறு துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படும்.இந்த, 5 நாட்களில் மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை