உள்ளூர் செய்திகள்

திருநங்கை தற்கொலை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே அரளிவிதை அரைத்து குடித்து திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம் அடுத்த காளசமுத்திரத்தைச் சேர்ந்தவர் செல்வி, 55; திருநங்கை. இவர் வீ.கூட்ரோடில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை 10:30 மணியளவில் அரளிவிதை அரைத்து குடித்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி