உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே வழிப்பறி வழக்கில் திருநங்கைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கும்பகோணம் சந்தன விநாயகர் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் சுரேஷ்,37; கடந்த 2013ம் ஆண்டு ஏப்., மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு பைக்கில் சென்றார். திருநாவலுார் அடுத்த மேட்டத்துார் அருகே சென்ற போது, வண்டிப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (எ) இளவஞ்சி,35; என்ற திருநங்கை, சுரேஷினை மறித்து மிரட்டி ரூ.7,500 பணத்தை பறித்தார். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை உளுந்துார்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில், இளவஞ்சிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார். தனது வயதான தாய், தந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை எனவும், மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் வேண்டும் எனவும் இளவஞ்சி கூறினார். இதையடுத்து, இளவஞ்சியை ஜாமீனில் அனுப்புமாறு நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை