முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் ரூ.43.66 கோடி மதிப்பில் சிகிச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 48,451 பயனாளிகளுக்கு 43.66 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வு ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்களுக்கு எளிதாக மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்கிறது. மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 48,451 பயனாளிகளுக்கு 43 கோடியே 66 லட்சத்து 4 ஆயிரத்து 369 ரூபாய் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ முகாம்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.