உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் விழா..

கள்ளக்குறிச்சி: வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கள்ளக்குறிச்சி எப்.எஸ்.எஸ்., எனும் நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாரதியார் வரவேற்றார்.வேம்பு, புங்கன், நாவல், குல்மகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.ஏற்பாடுகளை, எப்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் அரவிந்தன், அசோக்குமார், குமரேசன் செய்திருந்தனர்.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள அனைத்து மரக்கன்றுகளையும் முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிப்போம் என பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்றனர். எப்.எஸ்.எஸ்., பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை