உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / த.வெ.க., மாநாடு முன்னேற்பாடு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க., மாநாடு முன்னேற்பாடு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதி த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மதுரையில் நடக்கும் த.வெ.க. மாநாட்டிற்கு செல்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் உளுந்துார்பேட்டை தொகுதி அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணிபாலாஜி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட இணை செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சக்திவேல், பாரதிராஜா, கார்த்திக், அஜய்குமார், பாரத், வேலுமணி, செந்தில் முருகன், சிவாஜிகணேசன், ரோக்கிய சதீஷ், சசிகுமார், ராஜலட்சுமி, சுவேதா, கவிதா, ராஜ்குமார், வசந்தன், அன்பரசு, மணிகண்டன், அஜித் குமார், ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ